#Breaking: மனைவி கண்முன் ரௌடி துள்ளத்துடிக்க படுகொலை; ஈரோட்டில் பயங்கரம்.!
Tamilspark Tamil March 20, 2025 01:48 AM
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நசியனூர் பகுதியில், இன்று பிரபல ரௌடி மர்ம கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஜான். இவர் அப்பகுதியில் ரௌடியாக வலம்வருகிறார். இவரின் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் குற்றவழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதனிடையே, இன்று தனது மனைவியுடன் ஜான் திருப்பூர் நோக்கி பயணம் செய்தார்.

அப்போது, இவர்களின் காரை சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நசியனூர் பகுதியில் மர்ம நபர்கள் வழிமறித்தனர். அப்போது, காரில் இருந்து இறங்கிய ரௌடி ஜானை சுற்றிவளைத்த 5 பேர் கும்பல், சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தப்பிச் சென்றது.

இதையும் படிங்க:

கொலை செய்யப்பட்ட ஜான், வழக்கு ஒன்றில் கைதாகி சமீபத்தில் தான் பிணையில் வந்தார். மேலும், தினமும் கிச்சிபாளையம் காவல் நிலையத்திலும் கையெழுத்திட்டு வந்துள்ளார். இதனிடையே தான் அவரை மர்ம கும்பல் கொலை செய்தது.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.