“பெண் வேடம்….” தம்பியிடம் செல்போனில் பேசிய அக்கா…. “அந்த” காட்சியை கண்டு ஷாக்கான உறவினர்கள்…. பெரும் சோகம்…!!
SeithiSolai Tamil March 20, 2025 01:48 AM

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வல்லசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(17). இவர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சந்தோஷ்குமாரின் தாய் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். கடந்த 15-ஆம் தேதி சந்தோஷ் குமார் தனது தாயின் சேலையை அணிந்து பெண் வேடமிட்டது போன்ற போட்டோவை செல்போனில் டிபியாக வைத்துள்ளார். இதனை பார்த்ததும் வெளியூரில் வசிக்கும் சந்தோஷ்குமார் சகோதரி செல்போன் மூலம் தனது தம்பியை தொடர்பு கொண்டு உடனடியாக அந்த படத்தை நீக்குமாறு கூறியுள்ளார்.

அதன் பிறகு சந்தோஷ்குமார் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் அவரது சகோதரி உறவினர்களை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறியுள்ளார். அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது சந்தோஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் இடத்திற்கு சென்று சந்தோஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.