புதுச்சேரியில் 2025-26 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் இலக்காகக் கொண்ட பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய முதல்வர் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள (பிபிஎல்) பிரிவில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவி ரூ1000லிருந்து ரூ2500 வரை அரசு முடிவு செய்துள்ளது என்றார். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் கீழ் வரும் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் மாதாந்திர முதியோர் ஓய்வூதியம் 500 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் புதுச்சேரி மக்களை பாதிக்காத வகையில் வரி உயர்த்தப்பட்டு மாநில வருவாயை உயர்த்தப்படும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும். புதுச்சேரி மாநில மக்கள் வளர்ச்சிக்காக அனைத்து தொகுதிகளிலும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள, அரசின் எந்த நலத்திட்ட உதவிகளையும் பெறாத மஞ்சள் அட்டை வைத்துள்ள குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஏற்கனவே சிவப்பு அட்டை வைத்துள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ. 2500 வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.