பொதுவாக தொப்பை வர காரணம் மன அழுத்தம் ,நாம் சாப்பிடும் முறை .பழக்க வழக்கம் போன்றவை .இந்த தொப்பையை குறைக்க சிலர் படாத பாடு படுவார்கள் .ஆனால் சில சிம்பிளான வழிகளை பின்பற்றி எப்படி இந்த தொப்பையை குறைக்கலாம் என்று நாம் காணலாம் .
1.காலையில் எழுந்த ஒரு மணி நேரத்திற்குள் காலை சிற்றுண்டியை சாப்பிடுங்கள் .சில வகையான மீன் மாத்திரைகளை எடுத்து கொள்ளவும் ,
2.இவற்றில் இருக்கும் ஒமேகா 3 உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் .இரவு உணவை எட்டு மணிக்குள் சாப்பிடுங்கள் .மேலும் சில குறிப்புகளை படியுங்கள்
3.காலையில் தினமும் நெல்லிக்காய் ஜூஸ் அருந்தி வரலாம்.இது கொழுப்பை கரைக்கும்
4.காலை உணவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்
5.மதியம் சோறு குறைவாக எடுத்துக்கொண்டு அதனுடன் வேக வைத்த காய்கறிகள் எடுத்துக்கொள்ளலாம்.
6.மாலை நேரத்தில் சாப்பிடும் துரித உணவுகள் மற்றும் நொறுக்கு தீனிக்கு பதிலாக வேக வைத்த சுண்டல் பயிறு போன்றவைகளை எடுத்துக் கொண்டால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்
7. தினமும் அடி வயிற்றில் அழுத்தம் கொடுக்கின்ற உடற்பயிற்சிகள் செய்து வரலாம். குறைந்தது 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வோருக்கு தொப்பை தொல்லை இருக்காது .
8.அண்ணாச்சி பழம், வெள்ளரி, நெல்லிக்காய் போன்றவைகளை அடிக்கடி சாப்பிட்டு வரலாம். இவை உங்கள் உடல் எடையை குறைப்பதில் மிகுந்த பயனளிக்கும்.
9.மேலும் பச்சை தண்ணீருக்கு பதிலாக வெதுவெதுப்பான வெண்ணிர் குடித்து வரலாம்.