#featured_image %name%
ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs டெல்லி – தர்மசாலா – 08.05.2025
ஆட்டம் கைவிடப்பட்டதுமுனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
பஞ்சாப் கிங்க்ஸ் அணி (10.1 ஓவர்களில் 122/1, பிரியான்ஷ் ஆர்யா 70, பிரப்சிம்ரன் சிங் ஆட்டமிழக்காமல் 50 ரன்) ஆட்டம் கைவிடப்பட்டது.
பூவாதலையா வென்ற பஞ்சாப் கிங்க்ஸ் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் பிரியான்ஷ் ஆர்யா (34 பந்துகளில் 70 ரன், 5 ஃபோர், 6 சிக்சர்) மற்றும் பிரப்சிம்ரன் சிங் (28 பந்துகளில் 50 ரன், 7 ஃபோர்) இருவரும் அற்புதமான தொடக்கம் தந்தனர்.
பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மாநிலங்களில் இரவில் பாகிஸ்தான் இராணுவம் இரவில் ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தத் தொடங்கியதால் தர்மசாலாவில் போர்க்கால நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எனவே விளையாட்டுவீரர்கள், ஊடக நன்பர்கள், ரசிகர்கள் அனைவரும் பத்திரமாக வீடு திரும்ப ஏதுவாக ஆட்டம் கைவிடப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
விளையாட்டு வீரர்கள், ஊடகத் துறையினர் பத்திரமான பகுதிக்குச் செல்ல தர்மசலாவிற்கு அருகே உள்ள “உனா” என்ற இடத்தில் இருந்து ஒரு சிறப்பு இரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக BCCI அறிவித்தது.
அருகில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுவிட்டதால், இனி வரும் ஆட்டங்கள் தர்மசாலாவில் நடக்க வாய்ப்பில்லை. இதில் ஒரு ஆட்டம் அகமதபாத்தில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஐபிஎல் ஆட்டம் போரால் பாதிக்கப்படுவது இதுவே முதல் முறை.
News First Appeared in