நாளை சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கும்... வெளியானது அறிவிப்பு!
Dinamaalai March 22, 2025 05:48 AM

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை வெள்ளிக்கிழமை அட்டவணை அடிப்படையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. சனிக்கிழமையான நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் நாளை அரசு, தனியார் உள்பட அனைத்துக் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (மார்ச்.22) வெள்ளிக்கிழமை அட்டவணை அடிப்படையில் இயங்கும். திருத்திய கால அட்டவணைப்படி நாளை பள்ளிகள் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர், தனியார் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.