வீட்டில் பணம், நகை சேரவில்லையா? - பீரோவை இந்த திசையில் வைத்து பாருங்கள்.!
Seithipunal Tamil March 22, 2025 10:48 AM

ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்கும் ஒரு பொருள் தான் பீரோ. இதில், துணிகள் மட்டுமின்றி, நகை மற்றும் பணத்தையும் வைப்போம். இந்த பீரோவை வீட்டில் சரியான திசையில், சரியான இடத்தில் வைக்க வேண்டும். இல்லையென்றால் அதன் விளைவாக வீட்டில் பணம் சேராமல் போய்விடும். இந்த நிலையில், பீரோவை எந்த திசையில் வைக்கலாம் என்று இந்தப் பதிவில் காண்போம்.

* படுக்கையறையில் பீரோவை நல்ல வெளிச்சம் வரும் ஜன்னலுக்கு அருகில் வைக்க வேண்டும். இதனால், பீரோவில் உள்ள பொருட்களை எடுக்க வசதியாக இருக்கும். மேலும், படுக்கையறையில் பீரோவை வைப்பதாக இருந்தால், கண்ணாடி இல்லாத பீரோவை வைக்க வேண்டும். ஏனெனில் அந்த கண்ணாடியில் படுக்கை பிரதிபலிக்க வாய்ப்புள்ளது. 

* பணம் மற்றும் நகையை பீரோவில் வைத்தால், அந்த பீரோவை வடக்கு பகுதியில் வைக்க வேண்டும். ஏனெனில் வடக்கு திசை குபேர திசை என்பதால் நகையும், பணமும் அதிகம் சேரும். 

* வீட்டில் எந்த இடத்தில பீரோவை வைத்தாலும் சுவற்றை ஒட்டி மிகவும் நெருக்கமாக வைக்காமல், சற்று இடைவெளிவிட்டு வைக்க வேண்டும். இதனால் வெளியே இருந்து வரும் நேர்மறை ஆற்றல் ஓட்டம் சிறப்பாக இருக்கும் மற்றும் வீடும் செல்வ செழிப்போடு இருக்கும். 

* பணம் வைக்கும் பீரோவானது எப்போதும் மரத்தால் ஆனதாக அல்லது இரும்பால் ஆனதாக இருக்க வேண்டும். இந்த பீரோவில் தான் செல்வம் பெருகும். பீரோவை தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும். பீரோவை திறக்கும் போது, அது வடக்கு அல்லது கிழக்கு திசையைப் பார்த்தவாறு இருக்க வேண்டும்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.