கோடைக்காலம் தொடங்கினால் வெயில் மக்களை வாட்டி வதைக்கும். அதிலும் கடந்த சில நாட்களாகவே வெப்ப நிலை இயல்பை விட அதிகரித்து வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்களுக்கு தலைவலி போன்ற பிரச்சேனைகள் ஏற்படுகிறது.
இந்தத் தலைவலிக்கு நீரிழப்பு ஒரு பொதுவான காரணமாகும். இதனைத் தடுக்க தண்ணீர் குடிப்பது அல்லது தர்பூசணி போன்ற நீர் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. தர்பூசணியில் அமினோ அமிலம் சிட்ருலின் உள்ளது. இது இரத்த நாளங்களைத் தளர்த்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
தர்பூசணி சாறு அனைத்து வகையான தலைவலிகளுக்கும் மருந்தாக இல்லாவிட்டாலும், இது நிச்சயமாக ஒரு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் நீரேற்றம் செய்யும் சிற்றுண்டியாக இருக்கலாம். இந்த வெயில் காலத்தில் தலைவலி ஏற்பட்டால் உடனே தர்பூசணி வாங்கி அதனை ஜூஸ் செய்து குடிப்பதன் மூலம் தலைவலியை குறைத்துக் கொள்ளலாம்.
தர்பூசணி சாறு ஒருவரை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் சருமத்தை நீரேற்றமாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்கும்" என்பது குறிப்பிடத்தக்கது.