தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் விஜய் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தான் போட்டி என நேரடியாக பேசினார். மேலும் அவர் திமுக மற்றும் பாஜக கட்சி தலைவர்களை நேரடியாக விமர்சித்து பேசினார்.
அவரது பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீமான் கூறியதாவது, திமுகவுடன் மோதி அழிக்கணும். அதை வீழ்த்தணும் என நினைக்கும் எனது தம்பி விஜயின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்.
ஆனால் கூட்டணி வைத்தால் தான் எதிரியை தேர்தலில் வெல்ல முடியும் என்பது சட்டமா? அல்லது ஏதேனும் மரபா? எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. இன்னும் 4 மாதத்தில் யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது தெரிந்துவிடும் என கூறியுள்ளார்.