இன்று முதல் 19 முக்கிய கோவில்களின் அருகே மதுக்கடைகள் செயல்படாது… “மொத்தமாக மூட உத்தரவு”… மாநில அரசு அதிரடி…!!!
SeithiSolai Tamil April 01, 2025 05:48 PM

மத்தியப் பிரதேச அரசால் ஏப்ரல் 1 முதல் 19 புனித தளங்கள் மற்றும் கோவில்களின் அருகே மதுபான விற்பனைக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மதுவிலக்கு உத்தரவு, மாநில அரசின் புதிய மதுவசதி கொள்கையின் கீழ் அமல்படுத்தப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் உஜ்ஜைன் மகாகாளேஸ்வர் கோயில் நகரம், அமர்கண்டக், ஓம்காரேஷ்வர் உள்ளிட்ட முக்கியமான தெய்வீகத்தளங்கள் அடங்கும்.

இந்த தடை விதிக்கப்பட்ட இடங்களில் புதிய மதுக்கடைக்கு உரிமம் வழங்கப்படமாட்டாது, அதேசமயம், ஏற்கனவே செயல்பட்டு வந்த மதுக்கடைகளும் மூடப்பட்டு விட்டன. இத்துடன், இந்த தடை காரணமாக அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சமன்செய்யும் விதமாக, மற்ற பகுதிகளில் மதுபானங்களின் விலையை உயர்த்தும் முடிவையும் அரசு எடுத்துள்ளது. இந்த தடைச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்ட்லா, மண்ட்சோர், மஹேஷ்வர், மைஹார், சித்ரகூட், பன்னா, சல்கன்பூர், உம்காரேஷ்வர், உர்சா, ததியா உள்ளிட்ட முனிசிபாலிட்டிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகள் அடங்குகின்றன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.