வீட்டிற்கு தேவையான அடிப்படைவசதிகளுக்கு நிதி உதவி… மத்திய அரசின் அருமையான திட்டம்… உடனே விண்ணப்பிக்கவும்..!!
SeithiSolai Tamil April 02, 2025 08:48 PM

மத்திய அரசு குப்பையே இல்லாத நாட்டை உருவாக்குவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமாக தொடங்கப்பட்ட திட்டம்தான் ஸ்வச் பாரத் மிஷன் – நகர்ப்புறம் 2.0. இந்த திட்டத்தின் மூலமாக நகர்புறங்களில் உள்ள கழிவறைகளே இல்லாத வீடுகளில் புதிதாக கழிப்பறைகள் கட்டுவதற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சமாக6, 667 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் சமூக கழிப்பறைகள், பொது கழிப்பறைகள், திடக்கழிவு மேலாண்மை போன்ற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்துமே செய்து கொடுக்கப்படும். இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம் மற்றும் வருமான சான்றிதழ் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். மேலும் இந்த திட்டத்திற்கு விருப்பம் உள்ளவர்கள் https://digilocker.meripehchaan.gov.in/ என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.