உலக அளவில் 3 நாடுகளில் அடுத்தடுத்து பாலியல் பொம்மைகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு தொடர்ந்து பார்சல்கள் வெடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ரஷ்யா தான் இந்த சதி வேலையின் பின்னால் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது
பிரிட்டன், ஜெர்மனி மற்றும் போலந்தில் கடந்த ஜூலை மாதம் courier டெப்போக்களில் வெடித்த மூன்று பார்சல்கள், ரஷ்யாவின் GRU உளவுத்துறை சார்பில் நடத்தப்பட்ட சபோத்தாஜ் சதி முயற்சியின் ஒரு பகுதியாக இருந்ததாக போலந்து விசாரணையில் வெளியாகியுள்ளது. இந்த பார்சல்களில் மேக்கப் பொருட்கள், மசாஜ் பெட்கள், செக்ஸ் டாய்கள் ஆகியவற்றுடன் தீப்பற்றக்கூடிய கான்கிரீட் வெடிகுண்டுகள் இருந்துள்ளன. சீனாவில் தயாரிக்கப்பட்ட மலிவு டிராக்கிங் சாதனங்களை டைமர் முறையில் மாற்றியமைத்து வெடிபொருட்கள் இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு எதிர்கால பயங்கர திட்டத்திற்கு முன்னோட்டமாக நடத்தப்பட்ட ‘dry run’ என ஐரோப்பிய பாதுகாப்பு அதிகாரிகள் கருதுகின்றனர்.
விசாரணையில், உக்ரைனாவைச் சேர்ந்த வ்லாடிஸ்லாவ் டெர்காவெட்ச் என்பவர், Telegram வழியாக “Warrior” என்ற ரஷ்ய முகவரிடமிருந்து கட்டளைகள் பெற்று லிதுவேனியாவில் பார்சல்கள் தயாரித்து அனுப்பியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வார்சாவில் வெடிக்காத நான்காவது பார்சல் போலீசாரால் கைப்பற்றப்பட்டதால் முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வ்லாடிஸ்லாவ் தற்போது போலந்தில் கைது செய்யப்பட்டு, ரஷ்ய உளவுத்துறைக்காக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதற்காக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சதி முயற்சி, ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடுகளின் மீது நடாத்தப்படும் ஹைபிரிட் போரில் ரஷ்யாவின் ஒளிந்த செயற்பாடுகளைக் காட்டுகிறது.