இன்றைய காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தையே தேர்வு செய்கிறார்கள். இதற்கு டிக்கெட்டை முன்பதிவு செய்வது அவசியம். ஒருசில நேரங்களில் ரயிலில் டிக்கெட் புக் செய்து அது கன்ஃபார்ம் ஆகாவிட்டாலும் அந்த ரயிலில் பயணம் செய்ய நினைக்கின்றனர். ரயில்வே விதிமுறைப்படி அவ்வாறு செய்வது குற்றம். காத்திருப்பு பட்டியலில் இருக்கும் டிக்கெட்டை வைத்து பயணம் செய்தால் 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த அபராத தொகையை செலுத்தி விட்டு அடுத்த ஸ்டேஷனில் இறங்கி பொது பெட்டியில் ஏறி செல்ல வேண்டும். ரயில் பயணத்தின் போது பயணிகளிடம் டிக்கெட் இல்லாவிட்டால் இந்திய ரயில்வே சட்டமூலம் 138 பிரிவின் கீழ் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்திய ரயில்வேயால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் அல்லது ரயில் புறப்பட்ட நிலையத்திலிருந்து இதுவரை சென்ற தூரத்திற்கு இடையான கட்டணம் மற்றும் 25 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி ரயில் டிக்கெட் விஷயத்தில் பயணிகள் ஏமாற்ற முயற்சித்தால் ரயில்வே சட்டம் 137 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இது தவறுக்கு ஆறு மாதம் சிறை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.