கர்நாடக மாநிலத்தில் உள்ள கதக் மாவட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அமரேஷ் (30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக பூஜா (27) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவருக்கு கடந்த சில நாட்களாக மாமனார் தேவ கௌடா, மாமியார் சசிகலா மற்றும் மைத்துனர் வீரன்ன கவுடா ஆகியோர் தொல்லை கொடுத்துள்ளனர்.
அதாவது பூஜா கருப்பாக இருப்பதாக கூறி தொடர்ந்து கேலியும் கிண்டலும் செய்ததால் வேதனை அடைந்த அந்த பெண் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் நடத்திய விசாரணையில் கணவரின் தாய் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர் தன் நிறத்தை காரணம் காட்டி கேலி செய்ததால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எழுதப்பட்டிருந்தது.
ஆனால் பூஜாவின் பெற்றோர் இதனை மறுத்த நிலையில் தங்கள் மகளை அவர்கள் மூவரும் சேர்ந்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.