2 குழந்தைகளை கதறக் கதற கழுத்தறுத்து கொலை...தாயும் தற்கொலை!
Newstm Tamil April 19, 2025 11:48 AM

ஐதராபாத்தில் உள்ள ஜீடிமெட்லா பகுதியில் உள்ள கஜுலராமரம் பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தேஜா . இவருக்கு வயது 35.  இவர் தனது இரு குழந்தைகளின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து அடுக்குமாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது கணவர் வெங்கடேஸ்வர ரெட்டியுடன் சேர்ந்து தேஜா  வாழ்ந்து வந்தார். இச்சம்பவம் குறித்து மாலை 4 மணிக்கு தகவல் கிடைத்ததும், ஜீடிமெட்லா போலீசார் விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.   அந்த நேரத்தில், தேஜா மற்றும் அவரது மகன் ஹர்ஷித் ரெட்டி இருவரும்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.

அவரின் இளைய மகன்  9 வயது ஆஷிஷ் ரெட்டி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். சம்பவ இடத்திலிருந்து தேஜா எழுதிய 6 பக்க தற்கொலை கடிதம் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த தற்கொலைக் கடிதத்தில், கணவர் மீது கோபம், குழந்தைகளின் உடல்நிலை, மன அழுத்தம் மற்றும் உடல்நலக் கோளாறுகள் ஆகியவை தனது முடிவுக்கு காரணம் என தேஜா எழுதியிருந்ததாக தெரிய வந்துள்ளது.இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.