இந்தியாவில் கூகுள் பே மற்றும் போன் பே இரண்டும் பிரபலமான ஆன்லைன் பண பரிவர்த்தனை செயலிகளாக உள்ளன. இரண்டும் கட்டண செயலிகளாக இவை இரண்டும் யுபிஐ அடிப்படையிலான பரிவர்த்தனைகளில் 85 சதவீத பங்குகளை வைத்துள்ளன. டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மக்களிடையே வெகுவாக அதிகரித்து விட்டது.தற்போது அனைத்து இடங்களிலும் யுபிஐ மூலமாக தங்களது மொபைல் போனில் இருந்து பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர். டீ கடை துவங்கி நகை வாங்குவது என அனைத்துக்கும் மக்கள் யுபிஐ பயன்படுத்துகின்றனர்.
பெரும்பாலான மக்கள் கைகளில் பணம் வைத்துக்கொள்வது கிடையாது. நேரடி பண பரிவர்த்தனை மேற்கொள்வது பெருமளவில் குறைந்து விட்டது.
இந்நிலையில் 2000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என பரவும் தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, 2000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பாக எந்த பரிசீலனையும் இல்லை.
2000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என பரவும் தகவல் பொய்யானது.யுபிஐ வழியாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க தொடர்ந்து உறுதி பூண்டுள்ளோம்" என குறிப்பிட்டுள்ளது.
யுபிஐ செயலிகளான போன்பே, கூகுள்பே, பேடிஎம் உள்பட பிற செயலிகளில் நாம் பணப்பரிமாற்றம் செய்யும்போது தற்போது எந்த வரியும் விதிக்கப்படுவது இல்லை.
ஆனால் இனி வரும் காலத்தில் யுபிஐ பணப்பரிமாற்றத்துக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.