சீச்சீ…! ஹோட்டல் அறையில் பைபிள் மீது சிறுநீர் கழித்து… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இளம்பெண்…. இதெல்லாம் தேவையா..?
SeithiSolai Tamil April 19, 2025 08:48 PM

அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷையரைச் சேர்ந்த 24 வயதான கெல்லி டெட்போர்டு என்ற பெண் சமூக வலைதளங்களில் பிரபலமானவர். இவர் கீன் நகரில் உள்ள Marriott ஹோட்டல் அறையில், ஏர் கண்டிஷனர், திரைகள், படுக்கை, பைபிள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறுநீர் கழித்து, தரையில் மலம் கழித்து, அதை கழிவுநீர் தொட்டியில் மறைத்து வைத்திருப்பது போன்ற செயல்கள் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது 2025 ஜனவரியில் நடைபெற்றதாகவும், இதற்கான வீடியோவை இவர் தானாகவே பதிவு செய்திருப்பதாகவும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே மாதத்தில் கெல்லி மீது இதற்கு முந்தைய ஒரு சம்பவம் தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. Monadnock Food Co-op என்ற மளிகைக் கடையில், உணவுப்பொருட்கள் மீது சிறுநீர் கழித்து வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சுமார் $1,500 மதிப்புள்ள உணவுப் பொருட்கள் வீணாகியுள்ளன. இந்த வீடியோவையும் கடையின் கண்காணிப்பு கேமராக்கள் பதிவு செய்துள்ளன.

இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 2021ம் ஆண்டிலிருந்தே பல்வேறு பொது இடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் கெல்லி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக வீடியோக்கள் இணையத்தில் கண்டறியப்பட்டுள்ளன.

தற்போது, இரண்டாவது வழக்கையும் சேர்த்து இவருக்கு குற்றவாளியாக 5 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மே 8-ஆம் தேதி நீதிமன்றத்தில் அவர் ஆஜராக உள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.