யம்மா இது கொஞ்சம் ஓவரா இல்லையா..? சாலையில் ஆட்டம் போட்ட பெண்கள்… ரீல்ஸ் எடுக்க இப்படியா..? கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ.. பாடம் புகட்டிய போலீஸ்.!!!
SeithiSolai Tamil April 19, 2025 11:48 AM

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில் கியாஸ்புரா சவுக் பகுதியில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அன்று பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கும் சாலையின் நடுவே இரண்டு பெண்கள் ரீல்ஸ் எடுப்பதற்காக நடனம் ஆடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் வாகனங்கள் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் சாலையின் நடுவே ஒரு பெண் பிங்க் கலர் சுடிதார் அணிந்தும், மற்றொரு பெண் பிளாக் மேட்ரன் உடையில் ஹிப் ஷேக்கிங் ஸ்டைலில் ஆடிக்கொண்டிருந்தனர். இதனை அப்பகுதியில் சென்ற ஒருவர் வீடியோவாக பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.

 

View this post on Instagram

 

இந்த புகாரை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பெண்களிடம் இது போன்று சாலையின் நடுவே வீடியோக்கள் எடுப்பது போக்குவரத்து விதிகளை மீறுவதாகும். இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஏசிபி குர்ப்ரீத் சிங்க் கூறியதாவது, பெங்களூருவில் உள்ள சாலையின் நடுவே நின்று சமீபத்தில் டீ குடித்த வீடியோ ஒன்று வைரலானதை அடுத்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேபோன்று பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.