அம்பேத்கர் ஜெயந்தியன்று, பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துக் கொண்ட ஜோடியால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்கள் கிரண், பிரியங்கா . காதலில் விழுந்த இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் . இதனால் இரு வீட்டிலும் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஆனாலும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய முடிவு செய்து அம்பேத்கர் ஜெயந்தி அன்று திருமணம் செய்து கொண்டனர். அதன்படி அம்பேத்கர் செய்தியை முன்னிட்டு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் தாசில்தார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட நிலையில் தலித் அமைப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.