அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியற்ற டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற நாள் முதல் தொடர்ந்து பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25% இறக்குமதி வரி விதிப்பு முறையை அறிவித்தார்.
இதனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அமெரிக்காவிற்கு கார்கள் ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
ஜாக்குவார் லேண்ட்ரோவர் நிறுவனம் அமெரிக்க சந்தையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சம் ஜாக்குவார் லேண்ட்ரோவர் வாகனங்களில் சுமார் 25% வாகனங்கள் அமெரிக்காவில் விற்கப்படுகின்றன. மேலும் அமெரிக்கா இந்திய பொருள்களுக்கு 26% வரி விதித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.