IPL 2025: மீண்டும் மும்பைக்கு எதிராக வென்ற பெங்களூர்
Dhinasari Tamil April 09, 2025 08:48 AM

#featured_image %name%

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐ.பி.எல் 2025 – பெங்களூரு vs மும்பை – வான்கடே, மும்பை – 07.04.2025

ராயல் சேலஞ்சர்ஸ் அணி (221/5, விராட் கோலி 67, ரஜத் படிதர் 64, ஜிதேஷ் ஷர்மா ஆட்டமிழக்காமல் 40, தேவதத் படிக்கல் 37, ட்ரண்ட் போல்ட் 2/57, ஹார்திக் பாண்ட்யா 2/45, விக்னேஷ் புதூர் 1/10) மும்பை இந்தியன்ஸ் அணியை (209/9, திலக் வர்மா 56, ஹார்திக பாண்ட்யா 42, சூர்யகுமார் யாதவ் 28, வில் ஜேக்ஸ் 22, ரியன் ரிக்கிள்டன் 17, ரோஹித் ஷர்மா 17, க்ருணால் பாண்ட்யா 4/45, ஹேசல்வுட் 2/37, யஷ் தயாள் 2/46, புவனேஷ் குமார் 1/48) 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே முதலில் மட்டையாட வந்த பெங்களூரு அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் (4 ரன்) முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான விராட் கொலி (42 பந்துகளில் 67 ரன், 8 ஃபோர், 2 சிக்சர்), தேவதத் படிக்கல் (22 பந்துகளில் 37 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ரஜத் படிதர் (32 பந்துகளில் 64 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) ஆகிய மூவரும் சிறப்பாக ஆடினர். கடைசிக் கட்டத்தில் ஜிதேஷ் சர்மா 4 சிக்ஸ் 2 ஃபோர் அடித்து, 19 பந்தில் 40 ரன் எடுத்து அதிரடி காட்ட, பெங்களூர் அணி சிறப்பான ஸ்கோர் பெற்றது. 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன் எடுத்தது.

222 ரன் என்ற கடின வெற்றி இலக்குடன் களத்தில் இறங்கிய மும்பை அணியில், தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் ரயன் ரிக்கல்டன் இருவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். 9 பந்தில் 1 சிக்ஸ் 2 ஃபோர் உடன் 17 ரன் அடித்து ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. ரிக்கல்டன் 17 ரன்னுடனும், வில் ஜோக்ஸ் 22 ரன்னுடனும் நடையைக் கட்டினார்கள். அதிரடி காட்டுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூரிய குமார் யாதவ், பந்துக்கு ஒரு ரன் என்ற நிலையில் 26 பந்தில் 28 ரன்களே எடுத்தார். இதில் 5 ஃபோர்கள். மீதமுள்ள பந்துகளை வீணடித்தார்.

திலக் வர்மாவும் பாண்டியாவும் அதிரடி காட்டி ரசிகர்களை மகிழ்வித்தார்கள். வர்மா 29 பந்துகளில் தலா 4 ஃபோர், சிக்ஸ்களுடன் 56 ரன்களை குவித்தார். அதிரடி காட்டிய பாண்டியா 15 பந்தில் 4 சிக்ஸ் 3 ஃபோர்களுடன் 42 ரன் குவித்தார். எனினும் பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 209 ரன்களே எடுக்க முடிந்தது.

இதனால் பெங்களூர் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.