உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் அடுத்த மாதம் 14-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பதவிக் காலம் மே 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிக்க மத்திய அரசுக்கு சஞ்சீவ் கண்ணா பரிந்துரை செய்தார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலைத் தொடர்ந்து மே மாதம் 14-ம் தேதி, நாட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்க உள்ளார்.