சிரிப்பு வீடியோ... சூப்பர் மார்க்கெட்டில் வாழைப்பழ தோலை உரித்து எடை போட சொன்ன இளைஞர்!
Dinamaalai April 07, 2025 02:48 AM

சமூக வலைதளங்களில் தினமும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இதிலும் வித்தியாசமான வீடியோக்கள் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றன. அந்த வகையில் ஒரு இளைஞர் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று வாழைப்பழம் மற்றும் முட்டைகளை வாங்கியுள்ளார்.
இதனையடுத்து தான் வாங்கிய பொருட்களுடன் பில் கவுண்டருக்கு சென்றார்.  அங்கு நின்று கொண்டிருந்த இளம் பெண் வாழை பழங்களின் எடை பார்க்க முயன்றார்.



அப்போது அந்த இளைஞர்  வாழைப்பழ தோலை உரித்து விட்டு பழத்தை மட்டும் ஒரு பையில் போட்டு எடை பார்க்க கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் ஒன்றும் சொல்லாமல் இருந்தார்.
ஆனால் அந்த பெண் முட்டையை எடை பார்க்கும் போது அதன் தோடுகளை உடைத்து கருவை மட்டும் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு கொடுத்துள்ளார். இதனால் அந்த இளைஞர் அதிர்ச்சியில் உறைந்தார்.  அந்த வீடியோ சமூக வலைதளங்களில்  மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.