பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு... உடை மாற்றும் போது கேரவனில் நுழைந்த இயக்குனர்...!
Dinamaalai April 02, 2025 08:48 PM

ஷாலினி பாண்டே  2017ல்  விஜய் தேவரகொண்டா படத்தில் நாயகியாக அறிமுகமாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். இவர் அடுத்தடுத்து   தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என படங்கள் நடித்து வந்தாலும் அவருக்கு முதல் படம் கொடுத்த ரீச் வேறு எந்த படத்திலும் கிடைக்கவில்லை .  

தற்போது தமிழில் இவர் இட்லி கடை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஷாலினி பாண்டே சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதில் அவர், கேரவனில் உடை மாற்றும் போது கதவை தட்டாமல் உள்ளே வந்ததாக அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டார்.  

எனக்கு அப்போது 22 வயதுதான் .  கோபத்தில் தான் இயக்குனரை வெளியே போகச் சொல்லி கத்தியதாகவும் ஷாலினி பாண்டே தெரிவித்துள்ளார். அவர் கூறியது தெலுங்கு பட இயக்குனர் என தெரிகிறது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.