இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்த வகையில் அவர் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அமெரிக்க சென்றிருந்தார். அப்போது பிரதமர் மோடி முன்னிலையிலேயே இந்தியாவின் வரிவிதிப்பு தொடர்பாக தடாலடியாக விமர்சித்தார் டிரம்ப். அப்போது பேசிய டிரம்ப் இந்தியாவில் அமெரிக்க பொருட்களுக்கு அதிகப்படியான வரி விதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.
இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு வரிவிதிப்பதை போல இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். இதேபோல் அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிக்கப்படும் என அறிவித்தார். இந்த நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதேபோல் சீனாவுக்கு 34 சதவீதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதிகபட்சமாக கம்போடியாவுக்கு 49 சதவீத வரியும், வியட்நாமுக்கு 46 சதவீத வரியும், இலங்கைக்கு 44 சதவீத வரியும் விதித்துள்ளார்.