மனதை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், வாயில் நல்ல வாசனை வரவும் பலரும் அன்றாட வாழ்க்கையில் பப்பிள்கம் பயணப்படுத்துகின்றனர். ஆனால் அது தற்போது சுகாதாரப் பிரச்சினையை உருவாக்கும் வகையில் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் யூனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ் (UCLA) பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில், ஒரு கிராம் பப்பிள்கம்மில் இருந்து 100 மைக்ரோ பிளாஸ்டிக் துணுக்குகள் வெளிவருவதாக கண்டறிந்துள்ளது. சில சுவை பப்பிள்கம் வகைகளில், 600 மைக்ரோ பிளாஸ்டிக் துணுக்குகள் வரை கூட வெளிவந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னேற்றமடைந்த தொழில்நுட்பத்தால் இன்று பயன்பாட்டில் உள்ள பப்பிள்கம், இயற்கை உற்பத்தி அல்ல. பெரும்பாலும் ‘பிளாஸ்டிக்’ போன்ற பிபிஏ, பாலிவினைல் அசிடேட், போலிஎத்திலீன் போன்ற செயற்கை பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன.
இந்தக் பப்பிள்கம்கள் வாயில் மெல்லும்போது, தலையசை மற்றும் நரம்பு முறையில் தீங்கிழைக்கும் அளவுக்கு நுண்ணிய பிளாஸ்டிக் துணுக்குகள் நம் உடலில் புகுந்து விடுகின்றன. இது, அல்சைமர்ஸ், பார்கின்சன்ஸ் நோய் போன்ற நரம்பியல் நோய்களுக்கு வழிவகுக்கும் என மருத்துவர் ஆதித்யா குப்தா தெரிவித்துள்ளார்.
நீண்டகாலம் மைக்ரோ பிளாஸ்டிக் தாக்கத்திற்கு உள்ளாகும் போது, மூளையின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். நரம்புகள், நினைவாற்றலை பாதிக்கக்கூடிய அளவுக்கு இந்த பிளாஸ்டிக் துணுக்குகள் தாக்கம் காட்டும்.
எனவே, இயற்கையாக தயாரிக்கப்பட்ட பப்பிள்கம்மை பயன்படுத்துவது, மேலும் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ள உணவுகளை சாப்பிட்டால், உடலில் ஏற்படும் நச்சுத் தாக்கங்களை குறைக்க உதவும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.