சாலையோரம் நின்ற 3 பேர்…. திடீரென கத்தியை காட்டி மிரட்டிய திருடன்… இறுதியில் நடந்த ட்விஸ்ட்…. வைரலாகும் வீடியோ..!!
SeithiSolai Tamil April 03, 2025 05:48 PM

ஒரு நாள் இரவு சந்தையில் நடந்த கொள்ளை முயற்சியை படம் பிடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூட்டிருந்த கடையின் முன்னால் 2 பெண்கள் மற்றும் 1 ஆண் நின்று பேசிக் கொண்டிருந்த வேளையில், அங்கிருந்து வேகமாக வந்த ஒருவர் தான் வைத்திருந்த எடுத்து, அந்த நபரிடம் உள்ள விலைமதிப்புள்ள பொருட்களை கேட்டு மிரட்டியுள்ளார்.

 

ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக, அந்த நபர் கடுமையாக எதிர்த்துப் போராடத் தொடங்குகிறார். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளியில், இரு பெண்களும் துணிச்சலாக களத்தில் இறங்கி அவரை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள். இந்த வாக்குவாதம் நடக்கும் போது, எதிர்பாராத திருப்பமாக கொள்ளையன் தன்னை தானே கத்தியால் காயப்படுத்திக் கொள்கிறார். இதனால் அவரது இடது கையில் இரத்தம் சிந்தத் தொடங்கியதும், பீதி அடைந்த கொள்ளையர் அங்கிருந்து ஓடிவிடுகிறார்.

பின் வீடியோவில், கையை பிடித்தபடி காயத்துடன் தவிப்பதைக் காண முடிகிறது. குற்றம் செய்ய வந்தவர், தனது தவறால் தான் காயமடைந்து ஓடவேண்டிய நிலைக்கு வந்ததைக் கண்டு நெட்டிசன்கள் “கர்மா தன்னையே குத்தியது” என நக்கலுடன் கருத்துகள் பதிவு செய்து வருகிறார்கள். “ஹேப்பி என்டிங்” என சிலர் சிரிப்புடன் தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.