சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தினம் தினம் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் இல்லத்தரசிகள் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஜான் மில்ஸ் என்ற பங்குச்சந்தை நிபுணர் தங்கத்தின் விலை அதிரடியாக குறையக் கூடும் என கணித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் மதிப்பு உயர்ந்துகொண்டே செல்வதால் அதன் மீதான ஈர்ர்ப்பு அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.68,080க்கும், கிராம் ரூ.8,510க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், உலக அளவில் தங்கத்தின் விலை அதிரடியாக குறையக் கூடும் அமெரிக்காவை சேர்ந்த John Mills என்ற பங்குச் சந்தை நிபுணர் கூறியுள்ளார். இவரின் கணிப்புப்படி தற்போது உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலை சட்டென்று அதிரடியாக 38% வீழ்ச்சி அடையும் என கூறப்பட்டுள்ளது. ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியிருப்பதால் இந்த கணிப்பு உலகளவில் முதலீட்டாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.