இன்றைய காலகட்டத்தில் பலவிதமான மோசடிகளும் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் வங்கி வாடிக்கையாளர் சேவை எண்களை பயன்படுத்தி மோசடி நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. வங்கி தொடர்பு எண்கள், ஆன்லைன் பேங்கிங் கார்டு புகார் குறித்த விபரங்களை அறிந்து கொள்வதற்கு வாடிக்கையாளர் சேவை மையங்கள் வங்கி மூலமாக வழங்கப்பட்டு உள்ளது. வங்கிகளுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள் இணையதளத்தில் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பெயரை பதிவிட்டு வாடிக்கையாளர் சேவை எண்ணை பெறுவார்கள்.
அதில் சில செல்போன் எண்களும் வரும். இவ்வாறு தேடப்படும் எண்களை சமீப நாட்களாக மோசடி கும்பல் கைவரிசை காட்டி வருகிறது. உண்மை தன்மை தெரியாத பலரும் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு வருவதால் பண மோசடியில் மோசடி கும்பல் ஈடுபடுகிறது. எனவே ஆன்லைன் வங்கி வாடிக்கையாளர் சேவை எண்ணை தேட வேண்டாம். வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தகவல்களை தெரிந்து கொள்வது சரியானதாக இருக்கும் என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.