சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்கந்தர்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில், ராஜஸ்தானின் ஜும்ரூ என்ற பகுதியில் வசிக்கும் அவரது தீவிர ரசிகரான குல்தீப் சிங் கஸ்வாய், FDFS- க்கு மட்டும் 817 டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார்.
இதற்காக அவர் ரூ.1.72 லட்சம் செலவிட்டுள்ளார். இது மட்டும் இல்லாமல், அவர் ஏற்கனவே ‘அந்திம்’, ‘கிசி கா பாய் கிசி கா ஜான்’ போன்ற பல படங்களுக்காகவும் இதே மாதிரி டிக்கெட் வாங்கி ரசிகர்களிடம் இலவசமாக பகிர்ந்துள்ளார்.
மும்பை பாண்ட்ராவில் உள்ள கேயிட்டி கேலக்ஸி திரையரங்கில், இந்த 817 டிக்கெட்டுகளும் சல்மான் ரசிகர்களுக்காக இலவசமாக வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். கடந்த டிசம்பர் 27ஆம் தேதி சல்மானின் 59வது பிறந்த நாளில், ‘பீயிங் ஹ்யூமன்’ பிராண்ட் உடைகள் ரூ.6.35 லட்சம் மதிப்பில் ஏழை மக்களுக்கு வழங்கியிருந்தார்.