Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வார எபிசோட்டில் நடக்க இருக்கும் காட்சிகளுக்கான வார புரோமோ குறித்த தொகுப்புகள்.
கடந்த வாரம் ரோகிணி மலேசியாவில் இருந்து வந்தவர் என்பது இல்லை என்ற ரகசியம் உடைந்து விட்டது. முதலில் இந்த விஷயம் ஒளிபரப்பான போது கனவு தான் என பலரும் ஆணித்தரமாக நம்பினர். ஆனால் கடைசியாக அது உண்மையாக அமைந்தது.
விஷயம் தெரிந்த பின்னர் ரோகிணியை சரமாரியாக அடித்து வீட்டை விட்டு தள்ளி வெளியேற்றினார். விஜயாவும் கடுப்பாகி பார்வதி வீட்டில் சென்று தங்கி விட்டார். இதில் வீட்டில் இருக்கும் முத்து மற்றும் மீனா இருவரும் பாட்டியை அழைத்து வர முடிவெடுக்கின்றனர்.
இந்நிலையில், பாட்டி வீட்டுக்கு வர அவர் ரோகிணி மற்றும் விஜயாவை அழைத்து வரச் சொல்லுகிறார். அண்ணாமலை விஜயாவுக்கு கால் செய்து அழைக்க மனோஜ் ரோகிணிக்கு போன் செய்து வீட்டுக்கு வரச் சொல்லுகிறார்.
வீட்டுக்கு வந்த பின்னர் பாட்டி மீனாவை சூடம் ஏற்றி எடுத்து வா என்கிறார். பாட்டி இனிமேல் உன்னிடம் எந்த ரகசியமும் இருக்கா? அப்படி இல்லை என்றால் இந்த வீட்டுக்கு நல்ல மருமகளா இரு எனக் கூறி சத்தியம் செய் எனக் கேட்கிறார்.
அண்ணாமலை இனி உன்னிடம் எந்த பொய்யும் இருக்காது தானே எனக் கேட்க ரோகிணி அழுதுக்கொண்டு நிற்கிறார். இந்நிலையில் ரசிகர்கள் கண்டிப்பா அந்த அம்மணி பொய் சத்தியம் தானே செய்ய போறாங்க.
எதுக்கு கேட்குறீங்க எனக் கலாய்த்து வருகின்றனர். ஆனாலும் மீனாவை விட இனி ரோகிணிக்கும், விஜயாவுக்கும் சண்டை வலுவாக இருக்கும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.