அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் டல்லாஸ்-ஃபோர்ட் வர்த் விமான நிலையத்தில் மார்ச் 14ம் தேதி விநோதமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமந்தா பால்மா என பெண், விமான நிலையத்துக்குள் நிர்வாணமாக நடந்து வந்து, தன்னை காதல் கடவுள் வீனஸ் என அறிவித்துள்ளார். இருவரை துரத்தி கடித்தும், பென்சிலால் குத்தியும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
அத்துடன் விமான நிலைய உணவக மேலாளரை தன்னுடைய பென்சிலை வைத்து முகத்திலும் தலையிலும் குத்தியது. அத்துடன், அவரது கையை கடித்தும் கொடூரமாக தாக்கினார். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.அந்தப் பெண் ஏர்போர்ட்டில் நிர்வாணமாக அங்கும் இங்கும் ஓடி அங்கிருந்தவர்களை தாக்க முயற்சி செய்கிறார்.
இந்நிலையில் விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரி அவரை தடுக்க முயல்கிறார். இருப்பினும் அந்தப் பெண் கத்திக்கொண்டு அங்கும் இங்கும் ஆவேசமாக ஓடுகிறார். இதனை பார்த்து அங்கிருந்த பயணிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்தது. இந்நிலையில் இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சற்று மனநலன் பாதிக்கப்பட்டவர் எனவும் தன்னுடைய 8 வயது மகளுடன் விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்தபோதுதான் இப்படி நடந்து கொண்டதும் தெரிய வந்தது.