கண்ணீர் வீடியோ... WWE ஹல்க் ஹோகனின் முன்னாள் மனைவி கதறல்!
Dinamaalai March 30, 2025 11:48 PM


 
WWE லெஜெண்ட் ஹல்க் ஹோகனின் முன்னாள் மனைவி லிண்டா ஹோகன். இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்  தனது தனிப்பட்ட வாழ்க்கையை உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.  2007ல்  25 ஆண்டுகளுக்கும் மேலான திருமண வாழ்க்கைக்குப் பிறகு ஹோகனிடமிருந்து லிண்டா விவாகரத்து பெற்றுள்ளார்.  


தனது வீடியோவில் அந்த விவாகரத்துக்குப் பிறகு  எதிர்கொண்ட மனவலிகள், குடும்பத்தில் ஏற்பட்ட பிளவுகள், மற்றும் மகளான புரூக் தொடர்பான பிரச்சனைகள் குறித்து கூறியுள்ளார். “இன்று ஏதோ ஒன்று என்னைத் தாக்கியது… நான் அழுகிறேன்…” எனக் கூறிய லிண்டா, பல ஆண்டுகளாக தனது மகளுடன் பேசியதே இல்லை. புரூக் திருமணம் செய்து இரட்டைக் குழந்தைகளை பெற்றது கூட தனக்கு தெரியப்படுத்தவில்லை என  வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.  


மேலும், ஹோகனுடன் ஏற்பட்ட பிரிந்தவுடனான மன அழுத்தத்தையும், அவர் திருமண வாழ்க்கையில் சந்தித்துள்ள அவமானங்களைப் பற்றியும் லிண்டா பதிவிட்டுள்ளார் “தெர்ரி (ஹோகன்) ஒரு பொய்யர், பாலியல் ஆசைக்கொண்டவர். அவரை விட்டுப் பிறகு நான் மீண்டும் திருமணம் செய்ய விரும்பவில்லை,” எனக் கூறியுள்ளார். வழக்கறிஞர்கள் ஒன்றாகச் சதி செய்து, தனக்குரிய பணத்தை பறித்துவிட்டதாகவும்  தீர்ப்பில் பாதி தொகை வழக்கறிஞர்களுக்கே சென்றதாகவும் லிண்டா கூறியுள்ளார்.  WWEயின் பிரபலமான முகமாக திகழ்ந்த ஹோகன், 2008க்குப் பிறகு 2 முறை திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.