ஹாலிவுட் நடிகரும், மார்ஷியல் ஆர்ட்ஸ் நிபுணருமான ஜீன்-க்லோட் வான் டாம் மீது ரோமானியாவில் பெரும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர் ஐந்து ரோமானிய பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தப் பெண்கள், ரோமானிய தொழிலதிபர் மற்றும் மாடலிங் நிறுவனம் நடத்தும் மோரல் போலியா தலைமையிலான குற்றக் குழுவினரால் கடத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் அந்த பெண்களை ஜீன்-க்லோட் வான் டாமுக்கு “பரிசாக” வழங்கியதாகவும், அந்த சம்பவங்கள் கன்ஸ் நகரில் அவர் நடத்திய ஒரு நிகழ்வில் நடந்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, 2020ல் தொடங்கிய ஒரு பெரிய மனிதக் கடத்தல் மற்றும் சிறுவர் கடத்தல் வழக்கின் ஒரு பகுதியாகும். குற்றச்சாட்டுகள் தற்போது விசாரணை நிலையில் உள்ளன.
ஜீன்-க்லோட் வான் டாம் தற்போது 64 வயதுடையவர், அவர் “ஸ்ட்ரீட் பைட்டர்”, “டபிள் இம்பாக்ட்”, “கிக் பாக்ஸர்” போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது வரை அவர் சார்பில் எந்தவிதமான விளக்கமும் வெளியிடப்படவில்லை.