இன்றைய காலகட்டத்தில் திருமணங்கள் என்றாலே பெற்றோர்கள் செலவுக்கு அலறுகின்றனர். ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் தொடங்கி ஹனிமூன் வரை செலவை பார்த்து மிரண்டு நிற்கின்றனர். அமெரிக்காவின் வெஸ்ட் வெர்ஜீனியா மாநிலத்தில் நூலகத்தில் நடைபெற்ற திருமணம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி 22 வயதான அமி பாரன் மற்றும் அவரது கணவர் ஹண்டர், ஜனவரியில் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்தின் விசேஷம் அவர்கள் பாரம்பரிய திருமண ஆடைகளை அணியாமல், ஜீன்ஸ் மற்றும் செக்கடை ஷர்ட்டில் ஒரே மாதிரியான உடைகளை அணிந்து திருமண மேடையை பதிவிட்டுள்ளனர். இந்த திருமணத்தை வெறும் $1,000 (சுமார் ரூ.83,000) செலவில் நடத்தி முடித்துவிட்டனர்.
திருமண செலவில் $300 கௌபாய் பூட்ஸ் வாங்கவும், $480 புகைப்படக் கலைஞரை ஒப்பந்தம் செய்யவும் பயன்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளனர். தனது முடி மற்றும் மேக்கப்பை அவரே செய்து கொண்டு, இசை மற்றும் உணவிற்கான ஏற்பாடுகளையும் தனிப்பட்ட முறையில் செய்துள்ளானர். பின்னர், “என் வாழ்க்கையின் சிறந்த நாள்” எனக் கூறி அந்த திருமணத்தின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.