இந்தியாவின் தொழில் பெருநகரமான மும்பையை துபாயுடன் இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் ரயில்களை இயக்கும் திட்டம் செயல்படுத்தப்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நேஷனல் National Advisor Bureau Limited நிறுவனம் இந்த அதிநவீன திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மும்பை மற்றும் துபாய் நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் 2 மணி நேரமாக குறைக்கப்படும் என தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த திட்டத்தில் ரயில்கள் 600 முதல் 1000 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் எனக் கூறப்படுகிறது.இத்திட்டம் 2030 க்குள் செயல்பாட்டுக்கு வரும் என கூறப்பட்ட நிலையில் இது இந்தியா மற்றும் யுஏஇ இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதாக இருக்கிறது.
இதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் போன்ற பொருள்களின் ஏற்றுமதி இறக்குமதியையும் இந்தத் திட்டம் எளிதாக்கும் என நம்பப்படுகிறது. இதன் மூலம் உலக அளவில் கடலுக்கடியில் ரயில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். இந்த பிரம்மாண்ட திட்டம் நிதி ஆதரவு, பொறியியல் சவால்கள் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்களை தாண்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.