சென்னை மாவட்டம் தாம்பரம் அருகே சேலையூர் பகுதியில் போக்குவரத்து காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு சிவகுமார் (53) என்பவர் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு பணி முடிந்த பிறகு வீட்டிற்கு வழக்கம் போல் திரும்பி கொண்டிருந்தார். இவர் பைக்கில் ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒரு தனியார் பேருந்து சாலை ஓரம் என்றது.
அந்த பேருந்தின் மீது எதிர்பாராத விதமாக சிவக்குமார் மோதினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் மீட்டு ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு திருமணமான நிலையில் 2 மகள்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.