“6 அடி பஸ்ஸில் 7 அடி உயர நடத்துனருக்கு வேலை”… கழுத்து வலியால் அவதிப்படுவதாக வேதனை… அமைச்சரின் அதிரடி உத்தரவு..!!!
SeithiSolai Tamil April 09, 2025 06:48 PM

தெலங்கானா மாநிலம் சந்திரயாங் பேட்டையைச் சேர்ந்த அமீன் அகமது அன்சாரி என்ற இளைஞர், தனது தந்தை 2021ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கருணை அடிப்படையில் போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர் பணியிடத்தைப் பெற்றார். ஆனால், அவர் 7 அடி உயரம் கொண்டவர் என்பதாலே, 6 அடி உயரமே உள்ள பேருந்தில் பணியாற்றும் போது, தொடர்ந்து தலை குனிந்து வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அமீன் அகமது தினமும் சுமார் 10 மணி நேரம் பேருந்தில் தனது தலைகுனிந்து வேலை செய்ய வேண்டிய அவச்தையில் உள்ளார். இதனால், கழுத்து வலி, முதுகு வலி மற்றும் தூக்கமின்மை உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு, அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலைமை அவரது வேலைக்கு பெரும் இடையூறாக மாறி வருகிறது.

அமீனின் நிலையை பார்த்த பயணிகள் பரிதாபம் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல்நிலை மேலும் மோசமாகாமல் இருக்க, அவருக்கு ஏற்ற வேறு பணியொன்றை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையைத் தொடர்ந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் அவருக்கு ஏற்ப வேறு பணி வழங்கும் ஆழமான ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் போக்குவரத்து அமைச்சர் பொன்னம் பிரபாகர், அமீன் அகமது அன்சாரியை பொருத்தமான வேலையில் நியமிக்க உத்தரவிட்டார். தெலுங்கானா போக்குவரத்து தலையகத்தில் அவரை பணியமர்த்த திட்டமிட்டு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.