ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் மௌசம். டாக்ஸி ஓட்டுனரான இவர் பஞ்சாபைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்கள் திருமணத்திற்கு குடும்பத்தினர் ஒத்துழைக்கவில்லை என்பதால் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார்கள். இந்த நிலையில் சம்பவத்தன்று மௌசம் நைட் ஷிப்ட் வேலையை முடித்துவிட்டு காலை 6 மணிக்கு வீடு திரும்பியுள்ளார் .
அப்பொழுது மனைவி வீட்டில் இல்லை என்பதை அறிந்த அவர் தேடிப்பார்தபோது வீட்டின் மேல் மாடியில் தனது மனைவி கள்ளகாதலன் நவீன் என்பவருடன் தனிமையில் இருப்பதை கண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நவீன் திடீரென்று துப்பாக்கியை எடுத்து மௌசம் தலையில் வைத்து உன்னை சுட்டு விடுவேன் என்றும், மீரட்டில் நடந்த பயங்கர கொலை சம்பவம் போல உன்னையும் கொன்று விடுவேன் என்று பயங்கரமாக மிரட்டி உள்ளார்.
இதனையடுத்து மௌசம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்துள்ளார். ஆனால் அதற்குள் இருவரும் அங்கிருந்து தப்பி உள்ளார்கள். பின்னர் மௌசம் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சமீபத்தில் மீரட் பகுதியில் தன்னுடைய மனைவியும், அவருடைய கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்து கணவருடைய உடல் துண்டுகளை டிரம்மில் போட்டு சிதைத்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல தற்போது இந்த சம்பவத்திலும் மிரட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.