கேரளாவில் உள்ள திரிச்சூரில் சாலையின் நடுவே பூனைக்குட்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனை அந்த வழியாக சென்ற சிஜோ திமோதி (44) என்பவர் பார்த்துள்ளார். அதன் பின் தனது பைக்கை நிறுத்தி கீழே குனிந்து பூனைக்குட்டியை தூக்கும் போது, அங்கிருந்து வேகமாக வந்த லாரி அவர் மீது மோதி அவர் தூக்கி வீசப்பட்டார்.
இதில் அவர் எதிர் திசையில் வந்த காரில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.