மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் காவல் அதிகாரி ஒருவர் உள்ளூர் ரயிலில் பெண்ணுடன் சேர்ந்து செய்த செயல் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இரண்டாம் வகுப்பு பெண்கள் ரயில் பெட்டியில் பயணித்த பெண் ஒருவர் நடனமாடி ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்ததை அமைதியாக நின்று பார்த்துக் கொண்டிருந்த காவல் அதிகாரி எஸ்.எப். குப்தா சிறிது நேரம் கழித்து அந்த பெண்ணுடன் அரட்டை அடிக்க தொடங்கினார்.
அதன் பின் அந்தப் பெண்ணுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ரயில் பயணத்தின் போது பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல் அதிகாரியே இது போன்று நடப்பது கண்டனத்துக்குரியது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து ரயில்வே காவல்துறை விரைவான நடவடிக்கை மேற்கொண்டு ,குப்தாவை பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் இரண்டே நாளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து வருகிறது. இச்சம்பவம் பணியில் இருக்கும் அதிகாரிகள் தங்களது தனிப்பட்ட வெளிப்பாடுகளை பொது இடங்களில் வெளிப்படுத்துவது குறித்த கேள்வியை எழுப்பி உள்ளது.