“பூமியில் பரவப்போகும் மர்ம வைரஸ்”… ஆயுதமாக மாறும் ஆய்வுகள்… பாபா வங்காவின் பகீர் கணிப்பு..!!
SeithiSolai Tamil April 19, 2025 02:48 AM

பல்கேரிய நாட்டின் தீர்க்கதரிசி பாபா வங்கா எதிர்கால கணிப்புகளை சொல்வதில் பெயர்பெற்றவர். இவர் மனித வாழ்க்கை பற்றிய ஆபத்தான கணிப்புகளை கூறியுள்ளார். அதாவது 63 ஆண்டுகளுக்குப் பிறகு சுமார் 2088 ஆம் ஆண்டில் பூமியில் ஒரு அறியப்படாத வைரஸ் பரவும் அந்த வைரஸின் காரணமாக மனிதர்கள் விரைவாக முதிர்வடைய தொடங்குவர்.

இதனால் அவர்களின் ஆயுள் நாட்கள் வேகமாக குறைந்து, சீக்கிரமாக மரணத்தை நெருங்குவார்கள் என பாபா வாங்கா கணித்துள்ளார். இது இன்றைய மாறிவரும் காலநிலை உயிரியல் மாற்றங்கள், ஆய்வகங்களில் கண்டறியப்படும் புதுப்புது வைரஸ்கள் மூலம் எதிர்காலத்தில் இதுபோன்ற அபாயகரமான சூழ்நிலை உருவாகலாம் என கூறப்படுகிறது.

உலக நாடுகள் பல பல்வேறு வைரஸ்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருவது எதிர்காலத்தில் இதுபோன்ற அபாயகரமான சூழ்நிலை உருவாகும் சாத்திய கூறுகளை அதிகப்படுத்துகின்றன. மேலும் பாபா பங்காவின் கணிப்பு படி 2025 முதல் 2066 வரை ஏற்படும் அதிர்ச்சி நிகழ்வுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில் 2025 ஆம் ஆண்டு ஐரோப்பா பல பகுதிகளாகப் பிளவடையும். 2028 ஆம் ஆண்டு உலகளாவிய பஞ்சம் ஏற்படும் என்றும் மனிதர்கள் வீனஸில் வாழ்வதற்கு முயற்சி செய்வார்கள் எனவும் கூறியுள்ளார். இதனை அடுத்து 2033 ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்ந்து பல நாடுகள் மூழ்க வாய்ப்பு உள்ளது.

2043 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் பெரும்பான்மையான பகுதிகளை இஸ்லாமியர்கள் கட்டுக்குள் கொண்டு செல்வர் எனவும், 2046 ஆம் ஆண்டு செயற்கை மனித உறுப்புகள் தயாரிப்பு அதிகமாகி வரும் எனவும் கூறியுள்ளார்.

அதன் பின் 2066 ஆம் ஆண்டு அமெரிக்கா சுற்றுச்சூழலை அளிக்கக்கூடிய மிகப்பெரிய ஆயுதத்தை உருவாக்கும் என பாபா வங்கா கணித்துள்ளார். இதற்கு முன்னரும் பாபா வங்காவின் பல கணிப்புகள் உண்மையாகியுள்ள நிலையில் உலகம் தற்போது அவரது கணிப்புகளை அதிக ஆர்வத்துடன் கவனித்து வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.