மகளின் திருமணத்திற்காக மாப்பிள்ளைப் பார்த்து வந்த நிலையில், மகளுக்கு பதிலாக மருமகனுடன் செல்போனில் மணிக்கணக்காக பேசி வந்த மாமியார், ஒரு கட்டத்தில், “என்ன ஆனாலும் சரி... நான் மருமகனுடன் தான் வாழ்வேன்” என்று பிடிவாதம் பிடித்து ஓடிப் போன சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்த வாலிபருடன் வீட்டை விட்டு வெளியேறி ஓடியிருக்கிறார். இந்த ஜோடியை ஒரு வார தேடுதலுக்குப் பின்னர் போலீசார் தங்களைத் தேடுவதை அறிந்து, காவல் நிலையத்தில் மாமியார் - மருமகன் ஜோடி சரணடைந்தனர்.
அப்போது, “நான் மருமகனையே திருமணம் செய்து கொள்வேன்” என்று அந்த பெண் போலீசாரிடம் பிடிவாதமாக கூறியிருக்கிறார்.
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் சப்னா. இவரது கணவர் ஜிஜேந்திரகுமார். இந்த தம்பதியின் மகள் ஷிவானி. இந்நிலையில் ஷிவானிக்கு திருமணம் செய்ய ராகுல் குமார் என்பவரை நிச்சயம் செய்தனர். ஷிவானியின் தாய் சப்னா மருமகன் ராகுல்குமாரிடம் மணிக்கணக்கில் பேசி வந்தார்.
இந்நிலையில் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கடந்த வாரம் மருமகன் ராகுல்குமாருடன் மாமியார் சப்னா திடீரென ஓட்டம் பிடித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் அவர்களை தேடி வந்தனர். காவல் நிலையத்தில் சரணடைந்தனர். போலீசாரிடம் சப்னா நான் ராகுல் குமாரையே திருமணம் செய்து கொள்வேன். நான் வீட்டில் இருந்து செல்லும் போது ஒரு செல்போனும், ரூ.200 மட்டுமே என்னிடம் இருந்தது.
லட்சக்கணக்கான ரூபாய் மற்றும் நகைகளுடன் நான் ஓடி விட்டதாக எனது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். நான் எதையும் எடுத்து செல்லவில்லை” என்று பிடிவாதம் பிடித்துள்ளார்.