ச்ச்சீ..! கேட்டாலே கொடுமையா இருக்கு…!! “யானைச் சாணியில் இனிப்பு சுவையில் புதிய உணவு”… இது சீனாவில் ரொம்ப பிரபலமாம்… வைரலாகும் வீடியோ..!!!
SeithiSolai Tamil April 19, 2025 02:48 PM

சீன நாடு உலகில் உள்ள பல்வேறு நாடுகளை விடவும் கலாச்சாரத்தில் வேறுபட்டது. அவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். ஆனால் அதை நாம் கேட்கும் போது நமக்கு அதெல்லாம் செட் ஆகாது. உலகைய முடக்கிய கொரோனா வைரஸ் சீன நாட்டில் இருந்து.

 

அந்த வகையில் தற்போது யானைச் சாணத்தில் இருந்து ஒரு இனிப்பு சுவை நிறைந்த உணவை தயாரித்து பிரபலப்படுத்தியுள்ளனர். அதாவது கிருமி நீக்கம் செய்யப்பட்ட உலர்ந்த யானைச் சாணத்திலிருந்து அந்த இனிப்பு நிறைந்த சுவை உணவை தயாரித்து அதனை வாடிக்கையாளர்களுக்கு விரிவாக கூறி அவர்கள் பரிமாறுகிறார்கள். மேலும் இதேபோன்று 15 வகையான மழை காடுகளை மையப்படுத்தி உணவுகள் தயாரிக்கப்படும் நிலையில் அதற்கு இந்திய மதிப்பில் 45 ஆயிரம் ரூபாய் வரையில் வசூலிக்கப்படுகிறது.

மேலும் இந்த வீடியோவை பார்த்த ஒரு பயனர் இது மிகவும் அருவருப்பானது நான் கண்டிப்பாக இதுபோன்ற உணவுகளை சாப்பிட மாட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.