“எனக்கு கேன்சர் இருக்குது”… பணம் செலவாவதை விரும்பல…. என் மனைவியையும் பிரிய முடியாது… கூடவே கூட்டிட்டு போறேன்… ரியல் எஸ்டேட் அதிபர் பகீர் முடிவு..!!
SeithiSolai Tamil April 18, 2025 11:48 AM

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ரியல் எஸ்டேட் டீலராக இருந்த குல்தீப் தியாகி (46), தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பிறகு, தானும் தற்கொலை செய்துகொண்டார். சம்பவத்தின் போது வீட்டில் இருந்த அவரது இரண்டு மகன்களும் துப்பாக்கி சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இருவரையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் குல்தீப்பின் அறையில் இருந்து ஒரு தற்கொலைக் கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், “நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது குடும்பத்தினருக்கு இது தெரியாது. என் சிகிச்சைக்காக பணம் வீணாவதை நான் விரும்பவில்லை. நீண்ட நாள் வாழ முடியாத நிலையில் இருக்கிறேன். என் மனைவியுடன் எப்போதும் ஒன்றாக இருப்போம் என்று சபதம் எடுத்தோம். அதனால்தான் என் மனைவியையும் அழைத்துச் செல்கிறேன். இது என் தனிப்பட்ட முடிவு,” என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் கிராம மக்கள் மற்றும் உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குல்தீப்பின் மருத்துவக் கோப்புகள் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.