சோகம்... பிரபல வழக்கறிஞர் ஜவளி காலமானார்... காவிரி, கிருஷ்ண நதி நீர் பங்கீடு வழக்கில் வாதாடியவர்!
Dinamaalai April 18, 2025 11:48 AM

காவேரி, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு வழக்கில் வாதாடிய உச்சநீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞர் ஷரத் ஜவளி உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84.

ஹாவேரி மாவட்டத்தில் வசித்து வந்தவர் ஜவளி. இவர் கடந்த 1964ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் வாழ்க்கையை தொடங்கினார். அதற்கு முன் அவர் பெங்களூருவில் வழக்குரைஞராக பணியாற்றினார்.

கர்நாடகம் மற்றும் தமிழகம் உட்பட பல மாநிலங்களுக்கு இடையேயான காவிரி, கிருஷ்ணா நதி நீர் பிரச்சனை வழக்குகளில் ஜாவளி வாதாடியுள்ளார்.அவரது கல்வி பயணத்தை அஜ்மீரின் மேயோ கல்லூரியில் முடித்த ஜவளி, முன்னாள் அதிபர் சட்டத்துறை அதிகாரியான எஸ்.வி. குப்தேவின் ஜூனியராக இருந்தவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சிட்னி சசெக்ஸ் கல்லூரி உறுப்பினராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் டி.சி. பாவேட்டின் கொள்ளுப் பேரனான ஜவளி, அவரை நினைவு கூறும் வகையில் ‘பாவேட் ஃபவுண்டேஷன்’ அமைப்பை உருவாக்கி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மூட் கோர்ட் மற்றும் பரிமாற்ற நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.