ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் நோயாளிக்கு பதிலாக அவரது தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஒருசிலர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நோயாளிக்கு பதிலாக அவரது தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக இளைஞர் ஒருவர் அந்த மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், நோயாளி யார் என்று தெரியாமல் ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே நின்றிருந்த இளைஞரின் தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே அவரது தந்தை நின்றிருந்த நிலையில் மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. மருத்துவர்களின் அலட்சியத்தால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 3 நாட்களில் அறிக்கை அளிக்க மருத்துவமனை முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.