இது தெரியுமா ? முட்டையை விட இந்த 4 உணவுகள்ல தான் புரதம் கொட்டிகிடக்குதாம்..!
Newstm Tamil April 20, 2025 05:48 AM

முட்டையின் மூலம் 6 கிராம் புரதம் உள்ளுக்கு கிடைக்கும் போது அதை விட அதிகமான புரதம் பெற நம்மிடையே உணவுகள் உண்டு. இது ஆரோக்கியமான உணவு முறையும் கூட. அப்படி முட்டையை விட சிறந்த 4 உணவுகள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்துகொள்வோம்.

முட்டையை விட உயர்ந்த புரதம் கொண்ட உணவில் கொண்டைக்கடலையும் ஒன்று. கொண்டைக்கடலை இந்திய உணவில் அனைத்து வயதினருக்கும் பிடித்தமான உணவு. அரை கப் சமைத்த கடலையில் புரதமானது 8 கிராம் அளவு கிடைக்கிறது. இது சிக்கலான கார்போ ஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து மற்றும் பல்வேறு நுண்ணூட்டச்சத்துக்களின் நல்ல மூலமும் கூட. கொண்டைக்கடலை தாவர அடிப்படையிலானது மற்றும் கூடுதல் நார்ச்சத்து கொண்டது. ஒரு வேளைக்கு அதிக புரதம் பெற விரும்பினால் கொண்டைக்கடலை எடுக்கலாம்.

முட்டையை விட அதிக புரதம் உள்ள மற்றொரு பொருள் பன்னீர். ஒரு பெரிய முட்டையில் 6 கிராம் அளவு புரதம் உள்ளது. காட்டேஜ் சீஸ் அரை கப் அளவில் 12 கிராம் அளவு புரதம் உள்ளது. 100 கிராம் பன்னீரில் 18 கிராம் அளவு புரதம் உள்ளது. மேலும் இதில் கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. பன்னீர் நல்ல புரதச்சத்தும் கூட. ஆனால் முழு கொழுப்புள்ள பாலில் இருந்து தயாரிக்கப்பட்டால் இவற்றில் கொழுப்பு அதிகமாக இருக்கும். கொழுப்பு குறைந்த ஒன்றை தேர்வு செய்வது உங்கள் ஆரோக்கியத்துக்கு சிறந்ததாக இருக்கும்.

பாதம் ஒரு அவுன்ஸ் அளவில் 6 கிராம் அளவு புரதம் உள்ளது. இது ஆரோக்கிய கொழுப்புகளை உள்ளடக்கியது. நார்ச்சத்து, வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் போன்றவற்றை கொண்டுள்ளது. இதை அப்படியே தோல் உரித்து ஊறவைத்து உரித்து சாப்பிடலாம். ஸ்மூத்தியில் அடித்து குடிக்கலாம். பாலுடன் கலந்து குடிக்கலாம். பாதாம் ஸ்மூத்தியிலும் சேர்க்கலாம்.

துத்தநாக விதைகள் ஆன இதை சாலட், ஸ்மூத்தி போன்றவற்றில் சேர்த்து சாப்பிடுகிறோம். ஒரு அவுன்ஸ் துத்தநாக விதையில் 8.5 கிராம் புரதம் உள்ளது. மேலும் இதில் ஜிங்க், இரும்பு, தாமிரம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் செலினியம் போன்றவையும் இதில் கூடுதலாக உள்ளன. இது தாவர அடிப்படையிலான புரதம் என்பதோடு இவை தாதுக்களையும் கொண்டுள்ளன. நீங்கள் தாவ

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.