நெல்லை மாவட்டம் பணகுடி அருகே நான்கு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்ததோடு கணவன் மனைவி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவத்தில் கணவன் கவலைக்கிடம் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுக்கும் ஆறு மருத்துவர்கள் கொண்ட குழுவினர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பணக்குடி அருகே கடம்பன் குளம் பகுதி ராஜேஷ் கண்ணனுக்கும் மனைவி புவனேஸ்வரிக்கும் இடையே இன்று மாலை குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதன் பின் ராஜேஷ்கண்ணன் வெளியே சென்ற வேளையில் புவனேஸ்வரி, தனது பிள்ளைகளாகிய ஆர்டிகா(8) ரித்திகா (6) முத்துநவிஷா (3) வயதிதா ( 1. 1/2) ஆகிய நான்கு பேருக்கும் அரளி விதையை அரைத்து கொடுத்து விட்டு தானும் சாப்பிட்ட நிலையில், மயங்கி கிடந்துள்ளனர். பின்னர் வீடு திரும்பிய ராஜேஷ் கண்ணன் சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்ததோடு பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு அவரும் தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் ஆறு பேரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். கணவனும் மனைவியும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கணவன் ராஜேஷ் கண்ணன் கவலைக்கிடமான முறையில் உள்ளார் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது நான்கு பிள்ளைகளும் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆறு பேர் கொண்ட மருத்துவர் குழு பிள்ளைகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.