“ரயிலில் இருந்து இறங்கிய பயணி”… நொடிப்பொழுதில் உயிரே போயிருக்கும்… ஹீரோ போல் வந்த காவலர்… வைரலாகும் வீடியோ…!!!
SeithiSolai Tamil April 20, 2025 06:48 PM

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் ரயில்வே நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் கவனம் பெற்றுவருகிறது. ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) காவலராக பணியாற்றும் ஹேமேந்திர சிங் என்ற போலீஸ்காரர், ஓர் உயிரை காப்பாற்றிய அவரது விழிப்புணர்வும், தைரியமும் சமூகத்தில் பெருமையாகப் பேசப்பட்டுவருகிறது.

CCTV காட்சியில், ஒரு பயணி நகரும் ரயிலில் இருந்து இறங்க முயற்சிக்கும் போது கால்தடுமாறி விழுந்துவிடும் நிலையில் இருந்தார். அந்த தருணத்தில், அருகிலேயே இருந்த ஹேமேந்திர சிங் கவனித்து, விரைவாக ஓடி சென்று அந்த பயணியை பிடித்து காப்பாற்றினார். ஒரு நொடியில் அந்த பயணி ரயிலின் கீழ் விழுந்திருப்பார் என்ற நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால் காவலரின் துரிதமான செயலால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

 

 

View this post on Instagram

 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, ஹேமேந்திர சிங்கிற்கு “உண்மையான வீரன்”, “ரயில்வே ஹீரோ” என புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. ரயில்வே துறை அதிகாரிகளும் அவரை பாராட்டி, அவரது விழிப்புணர்வும், சேவைக்கான அர்ப்பணப்பணியும் மற்ற காவலர்களுக்கான முன்மாதிரியாகும் என தெரிவித்துள்ளனர். அந்த பயணி சிறு காயங்களோடும் பெரிய ஆபத்துகளோடும் தப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.